2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காத்தான்குடியில் 25 சதவீத மாணவர்களுக்கு போஷாக்கில்லை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சுகாதாரப் பிரிவில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது 25 சதவீத மாணவர்கள் போஷாக்கின்றிக் காணப்பட்டதுடன், நான்கில் ஒரு வீதமான மாணவர்கள்; குடற்புண் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்புச் செயற்பாடுகள் தொடர்பான செயலமர்வு,  காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அன்றாடம் நாம் விதம் விதமான உணவுகளை உட்கொள்கிறோம். இவ்வாறு உட்கொள்ளும் உணவுகள் தேக ஆரோக்கியத்துக்கு போஷாக்கான உணவா என்பதையும் கவனிக்க வேண்டும். போஷாக்கான உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். அப்போதே நாம் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழமுடியும்' என்றார்.  
'எமது சில உணவுப் பழக்கவழக்கங்களினால் தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, உணவுப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X