Princiya Dixci / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், பைஷல் இஸ்மாயில்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச சபை மற்றும் காத்தான்குடி நகர சபை பிரிவுகளில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் நடவடிக்கை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டினால் இன்று (13) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உக்கும் குப்பை, உக்காத குப்பைகள், மீள் சுழற்சிக்கான குப்பை மற்றும் பசளைக் குப்பை என நான்கு வகையாக குப்பைகள் தரம் பிரித்து, அவற்றை மட்டக்களப்பு - செங்கலடி கொடுவாமடு பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள்; மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,
'நோயற்ற வாழ்வு முக்கியமாகும். அதற்காக நமது சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்காக சரியான முறையில் திண்மக்கழிவகற்றல் இடம்பெறுவதற்காகக் குப்பைகளைத் தரம் பிரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை தரம்பிரிக்கும் போது, பிரதேச மக்களின் ஒத்துழைப்பு முக்கியமானதாகும். அதே போன்று பாடசாலை மாணவர்களும் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்றார்.
குப்பைகளைத் தரம்பிரிக்கும் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், ஞா.கிருஸ்ணப்பிள்ளை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆiணாளர் எம்.சலீம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எஸ்.எம்.சபி மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் கே.கிருஸ்ணப்பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago