2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த 6 நாட்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த 8 வயதுச் சிறுமியொருவர் இன்று (10) உயிரிழந்துள்ளார்.  

வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் கலந்தர் பாவா பாத்திமா ஷிபா (வயது – 08) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) அனுமதிக்கப்பட்ட இச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இச்சிறுமி டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருக்கலாமென்று சந்தேகிப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X