2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கொலை குற்றவாளிகள் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கொலை செய்த குற்றச்சாட்டில் போரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணக்கவாசர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
 
பனிச்சேனை, வாதக்கல்மடு பகுதியிலுள்ள 40 ஏக்கர் காணி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக  கடந்த 2015.12.08 அன்று மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த அழையப்போடி இராசதுரை என்பவர்  பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த கொக்கட்டிச்சோலைப் பொலிஸார், சுப்பிரமணியம் செல்வராசா, பற்குணராசா பேரின்பராசா, உதயக்குமார் ரவிச்சந்திரன், அலையப்போடி கந்தசாமி, கந்தசாமி திசேத்திரன், ஜீவரட்ணம் சாந்தகுமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜசெய்த போது இவ்வாறு விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X