2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காளான் உற்பத்திப் பயிற்சி

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான காளான் வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி, நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக விதாதாவள நிலையத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் புனர்வாழ்வு அதிகார சபையும் இணைந்து நடத்திய இப்;பயிற்சிநெறியில், மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இருந்து  20 அங்கத்தவர்கள் கலந்துகொண்;டு பயிற்சிகளைப் பெற்றனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.பத்மநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டு காளான் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார விருத்தி செயற்றிட்டத்தின் கீழ் புனர்வாழ்வு அதிகார சபையினால் இப்பயிற்சிநெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த மாதங்களில் மெழுகு திரி உற்பத்தி, சூழலுக்கு இயைவான பைகள் உற்பத்தி ஆகிய பயிற்சிநெறிகள் புனர்வாழ்வு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X