2025 மே 08, வியாழக்கிழமை

கொள்ளையில் ஈடுபட்ட அறுவர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில்; கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் கொள்ளைக் கோஷ்டியொன்றைச் சேர்ந்த 06 பேரை ஞாயிற்றுக்கிழமை (20) மாலை கைதுசெய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் துரித விசாரணை மேற்கொண்டு, பொதுமக்களின் உதவியுடன் இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் இவர்களிடம்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர்கள் காத்தான்குடி முதலாம் குறிச்சி மற்றும் புதிய காத்தான்குடியைச்  சேர்ந்தவர்களென பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X