2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கோழிக்குஞ்சுகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், குடும்பமொன்றுக்கு 10 கோழிக்குஞ்சுகள் படி 15 குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள்  திங்கட்கிழமை வழங்கப்பட்டன.

காத்தான்குடி கால்நடை சுகாதார வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி அரச கால்நடை வைத்திய அதிகாரி டுஜித்திரா லிங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  சிப்லி பாறூக், 'வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X