Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,நல்லதம்பி நித்தியானந்தன்
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிர்வாகம் நிறுத்த வேண்டும், மாணவர்களின் விடுதிப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அப்பலைக்கழக மாணவர்கள் இன்று (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலையிலுள்ள நிர்வாகக் கட்டட முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மூவின மாணவர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவிக்கையில், 'பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதியை ஏற்படுத்தித் தரக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின்போது, 10 மாணவர்கள் மீது பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலையில் குறித்த முறைப்பாட்டினை மீளப்பெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியளித்திருந்தும் இதுவரை முறைப்பாடு மீளப் பெறப்படவில்லை,
மாணவர்கள் நிர்வாக கட்டடத்துக்;குள் நுழைவதாயின் பாதுகாவலரிடம் அனுமதி பெற்று கையெப்பமிட்டு செல்லும் நடைமுறையை தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. குறித்த நடைமுறையை மீளப்பெற வேண்டும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதிகளில் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஒரு விடுதியில் 8 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வருடங்களில் முடிக்க வேண்டிய பொது பட்டப்படிப்பினை நான்கு வருடங்களிலும் நான்கு வருடங்களில் முடிக்க வேண்டிய பட்டப்படிப்பினை ஐந்து வருடங்களிலும் முடிக்குமளவுக்கு வீணான இழுத்தடிப்புகள் நடைபெறுகின்றது. இதனால் தங்கள் பட்டம் பெற்றுச் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகின்றது. எனவே, இவ்வாறான குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்' என்றனர்.
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago