2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

வெளிவாரிப் பரீட்சைகள் நாளை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கற் கற்கைள் நிலையம் அறிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் நாளை சனிக்கிழமையிலிருந்து  தொடர்ந்து நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் அனைவரும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளுக்கு சமூகம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

04.06.2016 மற்றும் 05.06.2016 தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகளின் திகதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X