Suganthini Ratnam / 2016 மே 26 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வின்போது கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் திட்டிப் பேசியமையைக் கண்டித்து மட்டக்களப்பு நகரில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்காவுக்கு முன்பாகச் சென்;று மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகச் சென்று முடிவடைந்தது.
கடற்படை அதிகாரியை பேசியதாகக் கூறப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.


26 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago