Suganthini Ratnam / 2017 ஜனவரி 22 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 21ஆம் திகதி நடைபெறவிருந்த 'எழுக தமிழ் பேரணி' எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும் என்று அப்பேரவை அறிவித்துள்ளது.
இப்பேரணி 28ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் 10ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் அவர்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் வகையிலான ஜனநாயக எழுச்சியான எழுக தமிழ் நிகழ்வானது, கிழக்கு மாகாணத்தில் 21ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் பெப்ரவரி 10ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
அரசாங்கமானது கபடத்தனமான அரசியல் முன்னெடுப்புகள் மூலம் எமது அரசியல் விருப்புகளை புறந்தள்ளிய போலியான அரசியலமைப்பை எம்மக்கள் மீது திணிக்க முற்படும் இச்சந்தர்ப்பத்தில், எமது மக்களின் உண்மையான கோரிக்கைகள் என்ன என்பதை மீண்டும் உலகுக்கு எடுத்துக்கூற வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கின்றோம்.
குறிப்பாக, இலங்கையில் நியாயமான சமாதான முன்னெடுப்புகள், பொறுப்புக்கூறல் குறித்தான தமது செயற்பாட்டு அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் வழங்க வேண்டிய சூழ்நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நிரந்தரத் தீர்வு குறித்தான எமது எதிர்பார்ப்புகளை வெளிப்படையாகக் கூற வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் இருக்கின்றது.
இவை தொடர்பிலும்; அரசியலமைப்பு மற்றும் சமகால அரசியல் தொடர்பிலும் எம் தாயகத்தின் அனைத்து இனக்குழுமங்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் மக்கள் விழிப்புணர்வுப் பணிகளில் தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 minute ago
41 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
41 minute ago
51 minute ago
1 hours ago