2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கஜேந்திரகுமார் மீதான ஆயுத அச்சுறுத்தலுக்கு கடும் கண்டனம்

Editorial   / 2023 ஜூன் 04 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்
 

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மீது மிலேசத்தனமான ஆயுத அச்சுறுத்தல் வன்மையாக கண்டிக்க வேண்டியது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  பா.அரியநேத்திரன் கண்டனம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் மிலேசத்தனமாக ஆயுத முனையில் வௌ்ளிக்கிழமை (02) அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையை இது கண்டிக்க வேண்டியது

 தமிழ்தேசிய அரசியலில் ஈடுபடும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து கொலை செய்த வரலாறுகள் கடந்த 2009, மே,18, க்கு முன்னர் அதி கூடிய பயங்கரமாக காணப்பட்டது.
 

2004 தொடக்கம் 2008,வரை   ஜோசப் பரராசசிங்கம்,  ரவிராஜ், சிவநேசன்,  மகேஷ்வரன்,ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியில் இருந்த போதே கொலை செய்யப்பட்டனர். அம்பாறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
 

இவ்வாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கட்டவீழ்த்தப்படும் அசம்பாவிதங்கள்,அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்.சர்வதேச மனித ஆணையகத்தின் மனித உரிமை விழுமியங்களை பொறுப்பு வாய்ந்தவர்கள் கடைப்பிடித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும்.2004ஆம் ஆண்டில் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22, பேர் தெரிவாகியும், அவர்கள் சுதந்திரமாக வடக்கு கிழக்கில் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாது கொழும்பில் முடக்கப்பட்ட வரலாறு உண்டு.

ஆனால், இப்போது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற பின்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லாத சூழ்நிலை காணப்பட்டவேளை திடீரென யாழ் மாவட்ட பாராளுமனற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கி நீட்டப்பட்ட சம்பவம் பாரிய சம்பவமாகவே பார்க்கவேண்டும்.இதனால் நாட்டிலே ஜனநாயகம்,மனித உரிமைமீறல்கள்,பொதுமக்களின் பாதுகாப்பு எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் வலுக்கின்றதை காணலாம்.

ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவருடைய சொந்த மாவட்டத்தில் சுமந்திரமாக தமது அரசியல் பணியை செய்வதற்கு அச்சுறுத்தலை இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்டிருப்பது ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க முடியும்.எனவே இதற்கான பின்னணி யார்? இதற்கு பொறுப்பு என்பவற்றை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். அதேவேளை சர்வதேச சமூகம் இலங்கை அரசின் அடாவடி தனத்தை கண்டிக்க வேண்டும்.

இந்த நாட்டின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது,சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் புடம்போட்டு  காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, மற்றும் மனித உரிமைகள் ,பாதுகாப்பற்ற தன்மை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக  மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன் என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .