2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கஞ்சா கடத்திய இருவர் கைது

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் வைத்து கஞ்சா கடத்திய இருவரை நேற்று திங்கட்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.எம்.எம்.சியாத் (வயது 30) ஏ.எம்.நெசளாத்(வயது 32) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கி கஞ்சாவை கடத்திய இருவர் கிரான்குளத்தில் வைத்து காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 340 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையில் சென்ற பொலிஸ் குழுவொன்று அவர்களை கைது செய்ததுடன் இவர்களிடமிருந்து 340 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளது.

இரு சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்திய போது,  அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X