ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

காத்தன்குடி பொலிஸ் பிரிவில், பொலிஸ் பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய திடீர் சுற்றிவளைப்பில், பிரபல ஐஸ் வியாபாரி ஒருவர் உட்பட கஞ்சவை வைத்திருந்த இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறீ தெரிவித்தார்.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசி பணிப்புரையின்கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயரட்ணவின் வழிகாட்டலில், பொலிஸ் நிலையில் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர், இன்று (06) அதிகாலை இவர்களைக் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 410 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் 1,440 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago