Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மே 15 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீத்,பாறுக் ஷிஹான், வி.ரி.சகாதேவராஜா
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு செய்யக்கூடாது எனக்கூறி, ஏழு பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலான நீதிமன்ற கட்டளையை பெரிய நீலாவணை பொலிஸார், புதன்கிழமை (15) கையளித்துள்ளனர்.
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனின் வீட்டுக்கு புதன்கிழமை (15) காலை 07.30 மணியளவில் சென்றிருந்த பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரே இவ்வாறு நீதிமன்ற கட்டளையை கையளித்துள்ளனர்.
பொலிஸ் வாகனத்தில் வந்த பொலிஸார், “முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு செய்யக்கூடாது. அது பயங்கரவாதிகளுக்கான நினைவு நாள். நீதிமன்ற கட்டளையை மீறி செயற்பட்டால் கைது செய்வோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற கட்டளை எனக்கூறி நீதிமன்ற கட்டளை ஒன்றையும் வழங்கியிருந்ததோடு பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலயத்தை சூழவும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்,
அந்த கட்டளையில், நீதவான் நீதிமன்றம் கல்முனை என்று ஒருவருடைய கையெழுத்தும் இருக்கிறது. ஆனால், எந்த நீதிமன்றத்திற்குமான இறப்பர் முத்திரை அதிலே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாமோதரம் பிரதீவன், புஷ்பராஜ் துஷானந்தன், விநாயகம் விமலநாதன், தம்பிராசா செல்வராணி மற்றும் கிறிஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோருக்கே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்ட அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியை செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்ய முயற்சித்திருந்ததோடு சமூக செயற்பாட்டாளர் பு.துஷாநந்தனுக்கு நீதிமன்ற தடையுத்தரவும் வழங்கப்பட்டிருந்தது அதனைத் தொடர்ந்து இவர்களுடன் மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனும் இணைந்து கல்முனை மனித உரிமையத்திற்குச் சென்று முறைப்பாடுகளையும் கையளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
18 Oct 2025