2025 மே 08, வியாழக்கிழமை

கடத்தலுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை: த.ம.வி.பு

Gavitha   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்,வா.கிருஸ்ணா

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கதிர்காமத்தம்பி சிவப்பிரகாசம் மற்றும் பிள்ளையான் நித்தியானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டமைக்கும் தனது கட்சிக்கும், எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குறித்த கட்சி ஞாயிற்றுக்கிழமை (20) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதியன்று, மட்டக்களப்பு சித்தாண்டியைச்  சேர்ந்த ரெட்ணசிகாமணி புண்ணியமூர்த்தி என்பவர் கடத்திச்செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கதிர்காமத்தம்பி சிவப்பிரகாசம் மற்றும் பிள்ளையான் நித்தியானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் குறித்த சந்தேக நபர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்பட்ட  விடயம் உண்மைக்கு புறம்பானது.

அவர்களுக்கும் எமது கட்சிக்கும் எந்தவொரு சந்தேகமும் கிடையாது என்பதை நாம் ஊடகங்களுக்கு அறிவித்துக்கொள்கின்றோம்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X