Editorial / 2023 மே 07 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்திவேல்
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வகுப்புக்கு செல்வதாக சனிக்கிழமை மாலை கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் இருந்து இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் 16 வயதுடைய மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (வயது 16), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன்த் (வயது16) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.யூ.அப்துல் ஹக்கீம் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு மரண விசாரணையினை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
10 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
38 minute ago
2 hours ago