2025 மே 02, வெள்ளிக்கிழமை

கடவுச் சீட்டு சேவை மட்டக்களப்பில் ஆரம்பம்

Janu   / 2023 ஜூன் 22 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவில் உருவான ஒன்லைன் மூலம் மூன்று நாட்களில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் வியாழக்கிழமை  (22) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இவ்வைபவம் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதய'தர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டினைப் பெறும் நிலையங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X