Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2020 ஜனவரி 26 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரத் தளபாடங்கள் ஏற்றி வந்த வாகனமும், சந்தேக நபர்கள் இருவரும், மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி, ஓட்டமாவடியில் வைத்து இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை வட்டார வனஇலாகா உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பகுதியில் இருந்து வரக்காப்பொல பிரதேசத்துக்கு மேற்படி வாகனம் பயணித்த வேளையில், வாழைச்சேனை வனஇலாகா திணைக்களத்தின் அதிகாரிகளின் நடவடிக்கையின் மூலம் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றிக் கொண்டுவரப்பட்ட முதிரை கட்டில்கள் இரண்டும், முதிரை அலுமாரி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வட்டார வன உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago