Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 03 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, குளத்துமடு பகுதியில், கட்டுத் துப்பாக்கியுடன் 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளாரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பிரேமரத்ன வழிகாட்டலில், விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இக்குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுத் துப்பாக்கியும் அதற்குப் பயன்படுத்தும் ஈயக் குண்டுகளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுத் துப்பாக்கி, ஈயக் குண்டுகள் சகிதம் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, வாழைச்சேனை பொலிஸாரிடம் வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினர் ஒப்படைத்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025