Freelancer / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
கனடா காரைதீவு மக்கள் ஒன்றியம் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்கள், போட்டோ பிரதி எடுக்கும் இயந்திரம் என்பவை, நேற்று முன்தினம் (06) காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
டொக்டர் அ. வரதராசாவிடன் ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த அன்பளிப்பு பொருட்களை கையளிக்கும் வைபவம், காரைதீவு பிரதேச வைத்தியசாலையில், காரைதீவு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் உபசெயலாளர் வி.ரி சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது .
கனடாவில் வாழும் தமது பிள்ளைகளின் சார்பாக, ஓய்வு நிலை அதிபர்களான வெ. ஜெயநாதன், பொன் சிவானந்தன் ஆகியோர் இந்த அன்பளிப்பு பொருட்களை வைத்தியசாலைக்குப் பொறுப்பான மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் நடராஜா அருந்திரனிடம் வழங்கி வைத்தனர். இணைப்பாளராக செயற்பட்ட சமூக சேவையாளர் எம். புண்ணியநாதனும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago