Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் வீதியை விட்டு விலகி, வீட்டு மதில் மற்றும் தொலைத்தொடர்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
பிறிதொரு வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது, அதற்கு ஒதுங்கி இடமளித்ததால், தான் ஓட்டிச் சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக, ஜா-எலயிலிருந்து காத்தான்குடிக்கு, செரமிக்ஸ் பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த குறித்த கனரக வாகனத்தின் சாரதியான, ஜா-எலயைச் சேர்ந்த எச்.எம். ரவீந்திர (வயது 45) தெரிவித்தார்.
இவ் விபத்துக் குறித்து மட்டக்களப்புப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
.jpg)
.jpg)
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago