2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

கரையொதுங்கிய டொல்பின்கள்

Freelancer   / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் டொல்பின் வகை மீன்கள் சில கரையொதிங்கியிருந்தன.

குறித்த டொல்பின் வகை மீன்கள் புதன் கிழமை (25) காலை வழக்கத்திற்கு மாறாக இவ் வகை மீன்கள் ஆழ் கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி வந்திருந்ததாகவும் அவற்றினை மீண்டும் கடலில் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வாகரை பிரதேச செயலாளர் டி.அருணன் தெரிவித்தார்.

இதற்காக கடற்றொழில் திணைக்களம், கஜீவத்தை கடற்படையினர்,நாரா,கிரான்,அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவ சங்கங்கள் இணைந்து அவற்றினை பாதுகாப்பாக கடலில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது காயப்பட்ட டொல்பின்களுக்கு ஊசி மூலம் மருந்தேற்றப்பட்டு பாதுகாப்பாக சுமார் 1 கிலோ மீற்றருக்கு அப்பால் கடலில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .