2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கல்குடா, மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐ.தே.க. வின் 40 புதிய கிளைகள்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 29 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

கல்குடா மற்றும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் 40 புதிய கிளைகள் உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கிளைகள் திறக்கப்பட்டு வருவதாக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

இப்புதிய கிளைகளில் இதுவரையில் 3,500  உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

கட்சியின் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வலுப்படுத்தும் வகையில் கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அலுவலகம் அடுத்த மாதம் 21ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது எனவும்  அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X