2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்வி கற்பதன் அவசியம் குறித்து பேரணி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

சிறுவர்கள் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டியதன்  அவசியம்;; குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் பேரணி, ஓட்டமாவடியில்  புதன்கிழமை நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களும் கல்வித் திணைக்கள அதிகாரிகளும் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.  
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி மீண்டும் அப்பாடசாலையை வந்தடைந்தது.

இதன்போது மாணவர்களின் நிகழ்வுகள் மற்றும் தேசிய எழுத்தறிவு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X