Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடாமல் எந்தவொரு அரசியல் தீர்வையும் முஸ்லிம் கட்சிகளோ, வேறு கட்சிகளோ முன்வைக்கக் கூடாதென்று அம்மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் ஏகமனதாக தீர்;மானம் எடுத்துள்ளது.
காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நேற்று திங்கட்கிழமை மாலை காத்தான்குடியில் நடத்திய புதிய அரசியல் யாப்பு தொடர்பான மாநாட்டின்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனச் செயலாளர் அஸ்ஸெய்க் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.
ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக 'இந்த இந்த நாடு ஒற்றையாட்சி நாடாக இருக்க வேண்டும். அதேநேரம் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அதி உச்சத்துடன் வழங்கப்பட வேண்டும்.
முஸ்லிம்கள் எப்போதும் தனித்துவமான இனமாகும்.
மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக காணப்பட வேண்டும். எந்தவொரு மாகாணமும் இன்னொரு மாகாணத்துடன் இணைக்கின்ற செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது.
இந்த நாட்டின் ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படக்கூடிய ஜனாதிபதியாக இருக்கின்ற அதேநேரம், நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.
ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் அதேநேரம், நாடாளுமன்றத்தினால் அல்லது தேர்தலின் மூலம் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த இரண்டு உப ஜனாதிபதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும்.
அரச நியமனங்களின்போது, மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும்.
சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கின்ற அதேநேரம், இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும்.
இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களும் சரியாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதில் அவர்களின் மதம், கலாசாரம் சார்ந்த அனைத்து உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, மாகாணங்களின் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் மாகாண முதலமைச்சருக்கும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அரச காணிகள் நிலங்கள் பகிரப்படும்போது, முஸ்லிம்களுக்குரிய விகிதாசாரத்துக்;கேற்ப முஸ்லிம்களுக்கு பகிரப்பட வேண்டும்.
உள்ளூராட்சிமன்றங்களைப் பலப்படுத்துவதற்காக உள்ளூராட்சிமன்றங்களுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
அரசியல் யாப்பில் ஏற்படும் முரண்பாடுகளை நீக்குவதற்காக அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்டுவது அவசியமாகும்.
மாகாணங்களுக்குரிய பூரண அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். அவ்வாறான அதிகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது.
நாடாளுமன்றத்தில் கீழ் சபை மற்றும் மக்களால் தெரிவுசெய்யப்படும் செனட் சபை ஆகிய இரண்டு சபைகள் உருவாக்கப்படல் வேண்டும்' ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 May 2025
12 May 2025