2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கலாசாரத்துக்கு எதிரான புகைப்படம் அகற்றப்பட்டது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கல்லடி பாலத்துக்கு அருகாமையில், இலங்கை கலாசாரத்துக்கு ஒத்திசைக்காத புகைப்படமொன்று உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில நாள்களுக்கு முன்பு, மட்டக்களப்பு - கல்லடி பாலத்துக்கு அருகாமையில், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த விளம்பரப் பதாகையில் இருந்த புகைப்படமொன்றே, இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

மேற்படி கலாசாரத்துக்கு ஒத்திசைக்காத புகைப்படம் தொடர்பில் ஜனாதிபதி கோடாடாபய ராஜபக்‌ஷவினதும் கிழக்கு மாகாண ஆளுநரதும் கவனத்துக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கொண்டுவந்ததை அடுத்து, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதிக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் ஷிப்லி பாறூக் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .