Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல பல்கலைக்கழகங்களை உள்ளடக்கி, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுவரும் மாபெரும் கல்வி, தொழில் வழிகாட்டல் கண்காட்சி, நாளை (15) இரவு 7 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளின் நன்மை கருதி மாபெரும் கல்வி, தொழில்வழிகாட்டல் கண்காட்சி மட்டக்களப்பில் ஆரம்பமானது.
பாடசாலை கல்வியை பூர்த்திசெய்யும் மாணவர்கள் தொழில் கல்வியை பெற்றுக்கொள்ளும் வகையிலும் சிறந்த தொழில் வாய்ப்பை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலும், இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லிவின் லங்கா மற்றும் பிக்காஸ் கம்பஸ் இணைந்து நடத்தும் இந்த மாபெரும் கண்காட்சியை இன்று வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக், லிவின் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜெ.எம்.ஹபீ,எச்.எம்.எம்.ஹமீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் பாடசாலைக் கல்வியையும் பல்கலைக்கழக கல்வியையும் பூர்த்திசெய்த மாணவர்கள் தொழில்துறைக்குள் உள்வாங்கப்படுவதற்கு வழி தெரியாது போராட்டம் நடத்தும் நிலையிருந்து வருகின்றது.
இந்த நிலையில் அவ்வாறானவர்களை சரியான தெரிவுகளை மேற்கொண்டு சிறந்த தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஊக்கப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
9 hours ago