Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜூலை 05 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 33வது வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று (04) பாசிக்குடாவில் அமைந்துள்ள எலிபன்ட் றொக் றிஸோட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் நிருவாகிகள் தெரிவு இடம் பெற்றது. கல்விசாரா ஊழியர் சங்க தலைவராக ஏ. ஜெகராஜு, உப தலைவராக இரா.இராஜசேகரம், செயலாளராக த.சிறிதரன், உபசெயலாளராக மா.அமிர்தலிங்கம், பொருளாளராக ச.ரவீந்ரகுமார் தெரிவு செய்யப்பட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் இரா. இராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பிரதி உபவேந்தர், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் மற்றும் கலை கலாசார பீட பீடாதிபதி, பதில் பதிவாளர், நிதியாளர், தாபனங்கள் பிரிவின் (கல்விசாரா) சிரேஷ்ட உதவிப் பதிவாளர், சிரேஷ்ட உதவிப் பதிவாளர், சிரேஷ்ட உள்ளகக் கணக்காய்வாளர், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகம், திருகோணமலை வளாகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தைச் சேர்ந்த சுமார் 450 கல்விசாரா ஊழியர்கள் பங்கேற்றனர். இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அடிப்படையில் 2018-2019 வருடத்திற்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், பீடங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பிரிதிநிதிகளும் அத்துடன் கிழக்கொளி சஞ்சிகைக் குழு, கலை கலாசாரக் குழு, விளையாட்டுக் குழு போன்ற உப-குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
16 minute ago
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
40 minute ago