2024 மார்ச் 28, வியாழக்கிழமை

களப்பரிசோதனையும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையும்

Freelancer   / 2023 ஏப்ரல் 07 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம் றிபாஸின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு உட்பட்ட சாய்ந்தமருது, அட்டாளைசேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு போன்ற சுகாதார வைத்திய அதிகாரி
காரியாலய பிரதேசங்களில் களப்பரிசோதனையும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நேற்று (06) ஆரம்பித்த இந்த நிகழ்வானது எதிர்வரும் 10 திகதி வரை இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம்பெற்ற களப்பரிசோதனை மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பசால் நேரடியாக விஜயம் செய்து ஆய்வை
மேற்கொண்டார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.கே. எம் அர்சத் காரியப்பரின் பணிப்பின் பேரில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள், ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஷமீலுள் இலாஹி, டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள், சுகாதார
உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X