Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் வாழைச்சேனை செம்மனோடையில் வசிக்கும் திருமதி ஏ.நூர்ஜஹான், கழிவுப் பொருட்களைக் கொண்டு, கைப்பணி அலங்கார பொருட்களை உற்பத்தி செய்து வருவதுடன், கைப்பணி அலங்கா உற்பத்தப் பொருள் தேசிய விருதுக்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேங்காய் சிரட்டைகள், யோகட் கப்கள், மீன் ரின் தகரங்கள் போன்ற கழிவுப் பொருட்களால் இந்த கைப்பணி அலங்கார பொருட்களை உற்பத்தி செய்து வரும் இவர், தனது குடும்ப வாழ்வாதாரத்துக்கான அடிப்படைத் தொழிலாக இதனை முன்னெடுக்கின்றார்.
இரண்டு பிள்ளைகளைக் கொண்ட தனது குடும்பத்தில் கணவர் கூலி வேலைதொழிலாளியெனவும் தன்னிடம் மூலதனம் இல்லாததால் சிறியளவிலேயே இந்த உற்பத்திகளை செய்ய முடிவதாகவும் திருமதி ஏ.நூர்ஜஹான் தெரிவித்தார்.
கழிவுப் பொருட்கள் என கழிக்காமல் அதனைச் சேகரித்து இவ்வாறான உற்பத்திப் பொருட்களை செய்வது எனது விருப்பமாகும் எனவும் இதன் வருமானம் எனது பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு பெரிதும் உதவுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .