Freelancer / 2023 ஏப்ரல் 12 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காணமல்போன 10ஆம் ஆண்டு பாடசாலை மாணவி, ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து நேற்று (11) மாலை தனது காதலனுடன் இருந்த நிலையிலே மீட்கப்பட்டுள்ளார்.
காதலன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றகீம் தெரிவித்தார்.
மாணவி தற்போது மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த காதலன், காத்தான்குடியில் கைத்தொழில் நிலையமொன்றை நடத்தி வருகின்றார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்படி 15 வயது மாணவி, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருப்பாதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில், அவரது பெற்றோர் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பித்தக்கது. (N)
13 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
46 minute ago