Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்தமை தொடர்பாக பக்க சார்பற்ற முறையில் விசாரணை நடாத்த வேண்டும் என வலியுறுத்தி காத்தான்குடியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை சனஜக“கிழமை (03) முன்னெடுக்கப்பட்டது.
34 ஆவது வருட சுஹதாக்கள் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இந்த கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.
கொவிட் 19 கொரோனா தொற்று நிலவிய காலப்பகுதியில் முஸ்லிம்களுடைய ஜனாசாக்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டது
இது தொடர்பாக அரசாங்கம் நீதியான விசாரணை ஒன்றை நடத்தி தகனம் செய்ய காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய மகஜர் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பதற்காக அந்த மகஜரில் கையெழுத்து பெரும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது
தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் சட்டமாணி முகம்மட் றுஸ்வின் தலைமையில் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை. காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் முன்பாக மேற்கொள்ளப்பட்டது
காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் மற்றும் தேசிய சுஹகாக்கள் ஞாபகார்த்த நிறுவனமும் இணைந்து ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கை அடங்கிய மகஜாரை கையளிக்க உள்ளதாக தேசிய சுஹதாக்கள் ஞாபக நிறுவனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான சட்டமாணி முகம்மட் றுஸ்வின் தெரிவித்தார்
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago