2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதியதில் ஐவர் காயம்

Editorial   / 2022 ஜூன் 27 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்,ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு-கொழும்பு வீதியிலு: ஊறணி பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக  எரிபொருளுக்காக வீதியோரத்தில்  வரிசையாக காத்திருந்தவர்கள் மீது  தனியார் பஸ் மோதியதில்  5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன், ஐந்து மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் இன்று (27) காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுகின்றவர்களை செங்கலடி பிரதேசத்தில் இருந்து  ஏற்றிக் கொண்டு ஆரையம்பதியை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி மோதியுள்ளது.

படுகாயமடைந்த ஐவரும், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பஸ்ஸின் சாரதி  அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பஸ்ஸை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X