2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கால்நடைகளை கொல்லுபவர்களை தேடி விசேட நடவடிக்கை

Janu   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டு. மேச்சல் தரை மயலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடி கொலை செய்பவர்களைத் தேடி மேச்சல் தரை பகுதியை 50 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர்  விசேட தேடல் நடவடிக்கை ஒன்றை புதன்கிழமை (13)  முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் கால்நடைகள் திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டும் மின்சார வேலிகள், மற்றும் வாய்வெடி, வாளால் வெட்டியும் சுமார் 100 க்கு மேற்பட்ட கால்நடைகளை அண்மைக்காலமாக தினமும் ஒன்று என்ற வீதத்தில் கால்நடைகள்  கொல்லப்பட்டு வருவதாகப் பண்ணையாளர்களால் குற்றச்சாட்டு தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் 50க்கும்  மேற்பட்ட பொலிஸ் விசேட குழுவினர் 5 பிரிவுகளாகப் பிரிந்து புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து மேச்சல்தரை பகுதிக்குள் நுழைந்து மாலை 6 மணிவரை விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 3 கால்நடைகள் எந்தவிதமாக காயங்களும் இல்லாமல் உயிரிழந்த நிலையல், மீட்கப்பட்டதாகவும் அந்த பகுதியில் அனுமதி பெற்று சேனைபயிர் செய்கையில் ஈடுபட்டுவரும் 3 பேரை விசாரணைக்காக அழைத்து வந்து விசாரணையின் பின்னர் விடுவித்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனகராசா சரவணன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X