Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்கள், இன்று (16) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவிஸ் நாட்டில் உள்ள ஒருவர், தமது பிரதேசத்தில் அமைந்துள்ள ஓந்தாச்சிமடம் கிராம சேவை உத்தியோகத்தருக்கு, சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பேசியதைக் கண்டித்தே, அவர்கள் இவ்வாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'இலங்கை அரசாங்கத்தின் சுற்றுநிரூபத்துக்கு அமைவாகவும், சட்டத்திட்டத்துக்கு அமைவாகவும்தான் நாங்கள் கடமையாற்றி வருகின்றோம். வெளிநாட்டிலிருக்கின்றவருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய வகையிலும், அவர் கொடுக்கின்ற விடையங்களை உறுத்திப்படுத்தக்கூடிய வகையிலும், அவருக்குத் தேவையான வகையில் நாங்கள் செயற்பட முடியாது” எனவும் அவர்கள் இதன்போது கோஷம் எழுப்பினர்.
“கொரோனா தாக்கம் மற்றும் ஏனைய இயற்கைத் தாக்கங்களுக்கு மத்தியிலும், பல இன்னல்களைச் சுமந்தவண்ணம் கடமையாற்றி வருகின்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு, வெளிநாட்டில் உள்ள நபர், கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்.
இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவருக்கு எதிராக சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் திணைக்களத் தலைவருக்கும், ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்துக்கும் தெரிவித்துள்ளதோடு, பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உத்தியோகத்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago