2025 மே 24, சனிக்கிழமை

கிழக்கின் பாலர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு

வா.கிருஸ்ணா   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 1,856 பாலர் பாடசாலைகளிலும், ஒரே தினத்தில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம், இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சிரமதானத்தில், பாலர் பாடசாலைகளின் 4,062 ஆசிரியர்களும் பங்குபற்றியதுடன், மாணவர்களின் பெற்றோர், பொலிஸார், முப்படையினரும் ஈடுபட்டனர்.

வேகமாகப் பரவிவரும் டெங்குத் தாக்கத்தில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கும் வகையில், இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள மதர்ஸ்கெயார் பாலர் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், பாடசாலை முதன்மை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றன.

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகமும் இணைந்துகொண்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இன்று வரை, கிழக்கு மாகாணத்தில் பாலர் பாடசாலை மாணவர்கள் 110 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X