Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 28 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 272 பேருக்கு, ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமனக் கடிதங்கள், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவால், நேற்று முன்தினம் (26) மாலை வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு, புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.இ.தஸாநாயக்கா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது தமிழ் மொழி மூலம் 211 பேருக்கும் சிங்கள மொழி மூலம் 61 பேருக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,
“ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை என்பது கடைசியாக உள்ளது. இதனை நாங்கள் மேம்படுத்த வேண்டும். இதற்காக கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
“ஆங்கிலம் என்பது ஒரு உலக மொழியாகும். நம்மை சர்வதேசத்துடன் இணைத்து வைக்கின்ற ஒரு மொழியாக ஆங்கிலம் காணப்படுகின்றது.
“நியமனம் பெற்றுள்ள ஆங்கில டிப்ளோமா ஆசிரியர்கள், விணைத்திறனுடன் மாணவர்களுக்கு செயலாற்ற வேண்டும். மாணவர்களின் ஆங்கில கல்வியை மேம்படுத்த பாடுபட வேண்டும்.
“திருகோணமலையில் வைத்து பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்தோம். அதேபோன்று, மட்டக்களப்பில் வைத்து ஆங்கில டிப்ளோமா ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கின்றோம்.
“இது இந்த மாகாணத்தின் கல்வியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு சிறந்த செயற்றிட்டமாகும்” என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், எஸ்.யோகேஸ்வரன், அலி சாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் நிகால் கலபதி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி..நிசர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago