2025 மே 19, திங்கட்கிழமை

கிழக்கில் ஓர் இனப்பாலுறவுக்காரர்களை கண்டறிவதற்கான செயற்றிட்டம்

Editorial   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், துஷாரா

“ஓர் இனப்பாலுறவுக்காரர் பற்றிய விடயங்கள் விலாவாரியாகப் பேசப்பட்டு வருகின்ற சமகாலச் சூழ்நிலையில், கிழக்கு மாகாணத்தில் ஓர் இனப்பாலுறவுக்காரர்களைக் கண்டறிவதற்கான செயற்றிட்டம், அடுத்தாண்டு ஆரம்பிக்கப்படும்” என, மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு  பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு தொடர்பாக தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதன் ஒரு விரிவாக்கமாக இந்தச் செயற்றிட்டமும்  முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது பற்றித் தொடர்ந்து தெரிவித்த அவர்,

“ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தின் எல்லாத் தரப்பினருக்கும் தேவையாகவுள்ளது.

“ஓர் இனப்பாலுறவுக்காரர்களும் எயிட்ஸ் விடயத்தில் கரிசனைக்குரிய தரப்பினராக உள்ளார்கள்.

“அதன் காரணமாக மறைமுகமாகத் தங்களை ஓர் இனப்பாலுறவுக்காரர் எனக் கருதிக்கொள்ளும் ஒரு சாரார், சமூகத்தின் மத்தியில் உள்ளமை பற்றி சிலாகித்துப் பேசப்படுகிறது.

“ஓர் இனப்பாலுறவுக்காரர்களை தங்களைக் கருதிக் கொள்வோரை அதற்கென உள்ள விஷேட நிபுணத்துவக் குழுவினர்தான் அடையாளம் காண வேண்டும்.

“வடபகுதியில் இது சம்பந்தமாக சில ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், கிழக்கு மாகாணத்தில் இந்த முயற்சி இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை

 

“அதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஓர் இனப்பாலுறவுக்காரர்களாகக் கருதிக் கொள்வோர் சம்பந்தமான எந்தவொரு புள்ளிவிவரங்களும் இதுவரை இல்லை.

“ஓர் இனப்பாலுறவுக்காரர்எனக் கூறிக் கொள்வோரை நாங்கள் சாதாரணமாக அடையாளம் காண முடியாது. இது ஒரு இலகுவான விடயமல்ல. இதற்கென நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றப்பட்ட குழுவினரைக் கொண்டுதான் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

“பால் மாற்று சிகிச்சைகளைச் செய்து கொண்டவர்கள் முதலில்  தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கு விரும்ப வேண்டும். இது அவசியமானது.

“இதேவேளை, சுகாதாரத் திணைக்களத்தின் மறுஉற்பத்திக்கான பிரிவின் மூலமும் மருத்துவ ரீதியாக சில செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X