Princiya Dixci / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த 9 வருடங்களாக செயற்பட்டு வரும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகம், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னாலுள்ள கட்டடத்தில் நேற்று (19) திறந்துவைக்கப்பட்டது.
மேற்படி ஒன்றியத்தின் தலைவர் தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசா, பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.
இந்த அலுவலகத்தின் ஊடாக, கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து ஊடகவியலாளர்களையும் ஒருமுகப்படுத்தி, அவர்களின் நலன் மற்றும் ஊடகம் சார்ந்த விடயங்களில் அக்கறையுடன் செயற்பட முடியுமென ஒன்றியத்தின் தலைவர் தேவ அதிரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான பாக்கியநாதன் உட்பட கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிர்வாகிகள், அதன் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

44 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
2 hours ago