2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண அபிவிருத்திச் செயலணியின் விசேட கூட்டம்

Editorial   / 2019 மார்ச் 26 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

பிரதமர் ரணில் விக்கிமசிங்கவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண அபிவிருத்திச் செயலணியூடாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள துரித அபிவிருத்தித் திட்டங்களை வகுக்கும் விசேட கூட்டமொன்று, மாவட்டச் செயலகத்தில் நேற்று (25) நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண அபிவிருத்திச் செயலணியின் உறுப்பினர் என்.குகதாசன், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஆர்.ரட்ணசிங்கம், தினைக்கள அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

இம்மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள், இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டன.

இதன்படி, குடிநீர், விவசாயம், நீர்ப்பாசனம், வாழ்வாதாரத் திட்டங்கள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களின் முன்னேற்றம், முன்னாள் போராளிகளதும் மாற்றுத் திறனாளிகளதும் மேம்பாடு, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி, தொழிற்பேட்டைகளை உருவாக்குதல், கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட தேவைகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X