2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண அளுநர் காரியாலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்

Freelancer   / 2023 ஜூன் 02 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கு சேவை வழங்குவதற்காகவே அதிகாரிகள் உள்ளோம் மக்களின் குறைபாடுகளை எந்தவித தாமதமும் இன்றி நிவர்த்தி செய்யவேண்டும் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளேன் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவிதமமான வேலைகளையும் முடித்துத் தருவதற்காக கிழக்கு மாகாண அளுநர் காரியாலயம் 24 மணித்தியாலங்களும் மக்களின் சேவைக்காக திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னை கிழக்கு மாகாண ஆளுநராகவும், மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிபை்புக்குழு இணைத் தலைவராகவும் நியமித்துள்ளார். எல்லா பிரச்சினைகளையும் கடவுளால் மாத்திரமே தீர்த்துவைக்க முடியும் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினால் தீர்த்துவைக்க கூடிய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.  

நல்லாட்சி அரசாங்கத்தில் காலத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையின் மீன் சந்தை கட்டடத் தொகுதி வியாழக்கிழமை (01) மாலை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் காலத்தில் செங்கலடி பிரதேசத்துக்கு விஜயம் செய்த  முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் பொதுச் சந்தையில் மீன் சந்தை கட்டடத் தொகுதி நிர்மானிக்க 20 மில்லியன் ரூபாவும் விளையாட்டு மைதானங்கள் புனரமைக்க 10 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்திருந்தார்.  

குறித்த நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .