2025 மே 22, வியாழக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்று வந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, கிழக்குப் பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை மறுதினம் 19ஆம் திகதி ஆரம்பமாகுமென, பிரதி  உப வேந்தர்  வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

ஆகையால், இறுதியாண்டு மாணவர்கள், நாளையதினம் மீண்டும் பல்கலைக்கழகத்துக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 08.09.2017 அன்று கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை, மத்தியஸ்த குழு மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் விளைவாக அனைத்துத் தரப்பினரும் தீர்மான அடிப்படையில் சுமுகமான முடிவை எட்டியதையடுத்து, பல்கலைக் கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .