ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றைச் சிறப்பிக்கும் வகையில் வரலாற்றுத் தின நிகழ்வு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவர் எஸ்.கே.சிவகணேசன் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகக் கலை, கலாசார பீட புதிய கலையரங்கில் இன்று (12) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, கிழக்குப் பல்கலைக்கழகக் கலை, கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ஜீ. கென்னடியும் சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அ.பகிரதனும் கௌரவ அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினரும் ஓய்வுநிலை கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியருமான எஸ். மௌனகுருவும் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வில் வரலாற்றுத்துறை சிறப்புக் கற்கை மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட ஆய்வாளர் அறிமுகம், “கிழக்காவனம்” எனும் ஆவணக் காணொளி “மறந்து போகும் எம் பாரம்பரியம்” எனும் வில்லுப்பாட்டு உள்ளிட்டவை நடைபெற்றன .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025