2025 மே 19, திங்கட்கிழமை

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

வா.கிருஸ்ணா   / 2018 மார்ச் 03 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கிராமத்தில் நேற்று (02) இனந்தெரியாதவர்களினால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 39ஆம் கிராமமத்தில் வயல்வெளி ஊடாக வந்துகொண்டிருந்தவரை வழிமறித்த சிலர், அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

49 வயதான குறித்த நபர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்படும் போதே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X