Janu / 2024 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு , காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரீ . ஜவ்பர்கான்

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025