2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கைதிகளின் பிள்ளைகளுக்கு உபகரணங்கள்

Mithuna   / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரீ.எல்.ஜவ்பர்கான்

இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கியம் அமைப்பின் ஏற்பாட்டிற்கமைய சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்குப் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலை ஐக்கியம் பணிமனையில் கிழக்கு மாகாண தலைவர் போதகர் எஸ்.தயாசீலன் தலைமையில் புதன்கிழமை (27) நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன், மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச்சங்க தலைவர் எஸ்.ராஜன், சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளின் குடும்ப உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், சுமார் 10 இலட்சம் ரூபாய் பெருமதியான பாடசாலை உபகரணங்கள்  பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .