2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிசிர பண்டார உட்பட இருவர், இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால், நேற்று (30) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து இலஞ்சம் வாங்கியபோதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனரென, இலஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் மணல் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவரின் லொறியை, பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிப்பதற்கு 25,000 ரூபாயை, குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெற்றுள்ளதுடன், அதற்கு உடந்தையாக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும், மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .