2025 மே 01, வியாழக்கிழமை

கொரோனா அச்சம்; காத்தான்குடி பதுறியா வித்தியாலயம் மூடப்பட்டது

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி பதுரியா வித்தியாலயம், இன்று  (26)  காலை மூடப்பட்டதாக, காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவருடைய உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலைக்கு சமூகமளித்ததால் பாடசாலையை மூட வேண்டி ஏற்பட்டதாக, அவர் தெரிவித்தார்.

அதிபர்கள், தங்கள் பாடசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் இருந்து மாணவர் வருகை தருவதை தடைசெய்து கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .