2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 22 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்

நீண்டகாலமாக மட்டக்களப்பு தலைநகர் பிரதேசத்தில் பல வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள்,  மின் உபகரணங்களை கொள்ளையிட்டு வந்த ஒருவரை நேற்று முன்தினம்(20) மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து, 30 பவுண் தங்க ஆபரணங்கள், தொலைக்காட்சிகள், சமயல்வாயு சிலின்டர் உட்பட பல பொருட்களை மீட்டுள்ளதாக  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுகப்பதிகாரி ஏ.எம்.என்.பண்டார தெரிவித்தார்.

சந்தேகநபர், மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவரெனவும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 8 வீடுகள், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு வீடு உட்பட 9 வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .